உடுமலை கோவில்களில் வரலட்சுமி நோன்பு வழிபாடு!
ADDED :3806 days ago
உடுமலை: வரலட்சுமி விரத நோன்பையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் சிறப்பாக வழிபடும் பூஜைகளுள் ஆவணி மாதம் நடக்கும் வரலட்சுமி விரதமும் ஒன்று. உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழபாடு நடந்தது. வளையல், வண்ணமயமான பூக்களால் மாலை அணிவித்து பூஜை நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டன.