உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சோபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

திருச்சோபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!

புதுச்சத்திரம்:  திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம்  மங்களபுரீஸ்வரர் என்கிற திருச்சோபுரநாதர் கோவிலில் மாதந்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.   இந்த மாதபிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி மாலை 5:00 மணிக்கு நந்திக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அ பிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நந்தி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுப்  பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை சாரங்ககுமார், வைத்திய நாதன், சிவகுருநாதன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !