சதுர்த்திக்கு தயாராகிறது விநாயகர் சிலைகள்!
ADDED :3743 days ago
குயப்பேட்டை: சதுர்த்தி விழாவிற்காக, விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி செப்., 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆந்திராவில் இருந்து ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ எனப்படும் காகிதங்களால் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலைகள் ஓட்டேரி அருகே உள்ள கு யப்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 3 அடியில் இருந்து 13 அடி வரை உள்ள சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. 2,500 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மூன்று அடி உள்ள சிலை 5 கிலோவும், 13 அடி சிலை 15 கிலோ எடை கொண்டதாகும். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால், சிலைகளை மொத்தமாக வாங்க, ஓட்டேரி குயப்பேட்டைக்கு விய õபாரிகள் இப்போதே படையெடுக்க துவங்கியுள்ளனர்.