உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பெரியநாயகருக்கு சிறப்பு பூஜை!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பெரியநாயகருக்கு சிறப்பு பூஜை!

விருத்தாசலம்: ஆவணி மாத பவுர்ணமியையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பெரியநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடலுார்  மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகர் சன்னதியில் நேற்று மாலை 6:30 மணியளவில், பெரியநாயகர்,  பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை சுவாமி உற்சவர்களுக்கு பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை, தேன் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம்  நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரித்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !