உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

சிதம்பரம் வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் கீழவீதி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி நடத்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர்.  ஆவணி அவிட்டத்தையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை மற்றும் மகா தீபாராதனை  நடந்தது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் புது பூணுால் அணிந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம்  செய்து சென்றனர்.  இதனால் நேற்று காலை முதல் வீரஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் ஏராளமான  பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !