பச்சமடத்தில் உள்ள திருப்பதி கோயிலில் செப்.,3ல் கும்பாபிஷேகம்
ADDED :3740 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் பச்சமடத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து உபயதாரர்களால் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த உற்சவர் சிலைகள், செப்., 3ல் பச்சமடம் கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம், இரவு 7.25 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை திருவனந்தபுரம் கோட்டை தலைவர் பலராம் ராஜா, கோயில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.