ஸ்ரீவை.,யில் கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :5218 days ago
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு கும்ப பூஜை, யாகசாலை பூஜை, கும்பாபிஷேகம், தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் முருகன், மீனாட்சிசுந்தரம், அருணாசலம், சுப்பிரமணியன், முத்துகருப்பசாமி, முத்து கருப்பன், தலைவர் பாடலிங்கம், தர்மகர்த்தா பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.