உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியமங்கலம் கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை!

காரியமங்கலம் கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை!

செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் ராகவேந்திரர் ஆராதனையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி தாலுகா  காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு கோபூஜை நடந்தது.  தொடர்ந்து 10:30 மணிக்கு கணபதி, லட்சுமி, தன்வந்தரி, சுதர்சன, குபேர ஹோமம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு ராகவேந்திரர் அஷ்டோத்ர நாமவலியும், மதியம் 1:00 மணிக்கு கலசாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கினர்.  பூஜைகளை  லட்சுமிபதி சாஸ்திரிகள், பாலகணேஷ், சீனுவாசன் குருக்கள் செய்தனர். கோவில் அறங்காவலர் ரகுநாதன், மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !