இருக்கன்குடி கோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ.21 லட்சம் வசூல்
ADDED :3738 days ago
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில்பக்தர்களின் காணிக்கையாக ரூ.21 லட்சம் வசூல் ஆனது. சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு ,கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, கோவில்செயல்அலுவலர் ரோஜாலிசுமதா, மடப்புரம் கோவில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தேவராஜ் முன்னிலையில் கணக்கிடப்பட்டது. கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் காணிக்கை கணக்கிட்டனர். 21 லட்சத்து45 ஆயிரத்து 586 ரூபாய், 110 கிராம் தங்கம்,230 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.