1 லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தை கொண்ட பிரம்மாண்ட சிவ லிங்கம்!
புதுச்சேரி: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை வெரும் வார்த்தையாக மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் மத்தியில் அதையும் தாண்டி சிவனிடம் சரணடைந்து சிவ தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மார்கண்டேயபுரம் மடத்தை நிறுவி ஏழை எளிவருக்கு தொண்டு செய்து வருபவர் புதுச்சேரி வாலிபர் சந்திரசேகர்.
ஒருநாள் இவரிடம் சிவனடியார் ஒருவர் திருவாசக பாடலை சிடியில் பதிவு செய்ய சொல்லி வந்திருக்கிறார். அது வரை ஏதும் உனராத சந்திரசேகர் பதிவு செய்த பாடலை ஒருமுறை கேட்டிருக்கிறார் அப்புறமென்ன பாடலில் உறுகி சிவனே கதி என கிளம்பி விட்டார். தான் நேசித்த தொழிலை விட்டு விட்டு திருவாடுதுறை ஆதினத்தில் சைவ சித்தாந்த வகுப்பில் ஒரு வருடம் பயின்று ஒளியரசு என்ற சிவனடியாரிடம் தீட்சை பெற்று , 2011 ம் வருடம் 9 பேருடன் 12 நாட்கள் கடுமையான பயணம் செய்து அமர்நாத் பணி லிங்க தரிசணம் செய்து விட்டு வந்தவர் சும்மா இருக்க மனமில்லை.
தனி ஆளாக இயலாதவர்களுக்கு தொண்டு செய்ய கிளம்பி விட்டார். தெரு ஓரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு அளிப்பது. இறந்தவர்கள் உடலை எடுத்து செல்ல இலவச ஊர்தி ஏற்பாடு செய்து தருவது, பழமையான சிவன் கோயில்களை துாய்மை செய்வது, மாதம் தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்களுக்கு ருத்ராட்சம் அனிவிப்பது, போன்றவற்றில் ஈடுபட்டு வந்தவர் தனது வாழ்நாளில் 1கோடியே 8 பேருக்கு தனது கையால் ருத்ராட்சம் அணிவிக்க இருக்கிறார். கடந்த 5 வருடம் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் மார்கண்டேயன் மடத்தை நிறுவி சத்தமில்லாமல் தொண்டு செய்தவர், தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் உத்ராட்ச மணிகளை காெண்டு 8 அடி உயரத்தில் பிரம்மாண்ட ருத்ராட்ச சிவ லிங்கத்த உருவாக்கியுள்ளார். வரும் சித்தரை முழு நிலவு அன்று பிரதிக்ஷ்டை செய்ய வேலைகள் நடந்து வரும் நிலையில், எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி ஐயன் ஈசன் கட்டளை இடுகிறான் நான் அடிபணிகிறேன் என தொழிலை மறந்து குடும்பத்தை மறந்து சிவ தொண்டில் ஈடுபட்டு வரும் சந்திரசேகரை 97912-99536, என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.