உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் கோவில் கும்பாபிஷேகம்

காட்டூர் கோவில் கும்பாபிஷேகம்

திருப்போரூர்: காட்டூர், உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் கோவிலில், அங்காரகன் சன்னிதி கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருப்போரூர் அடுத்த, காட்டூரில், தையல்நாயகி உடனுறை உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிய ராஜகோபுரங்கள் உட்பட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த மே மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில், அங்காரகனுக்கு, செவ்வாய்க்கிழமை, புதிதாக சன்னிதி அமைத்து, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை; மகாலட்சுமி ஹோமம்; பூர்ணாஹூதி, முதல் கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை, இரண்டாம் கால பூஜை முடிந்து, காலை 8:30 மணிக்கு, அங்காரக சன்னிதி விமானத்தில், புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !