உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசக்தி கோயில் கும்பாபிஷேகம்

சிவசக்தி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை:அய்யலூர் அருகே எஸ்.பூசாரிபட்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணியம்மாள், சிவசக்தி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கிய யாக பூஜைகள், நான்கு கட்ட வேள்விகளாக நேற்று காலை வரை நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி கோபுர கலசங்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வத்தலக்குண்டு செல்வ விநாயகர் கோயில் பூசாரி வேலுச்சாமி தலைமையிலான வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பூசாரிபட்டி சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !