உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

மதுரை: ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணரின் அவதாரத்தை பெருமைப்படுத்தும் வகையில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜாதி, மத, இன பேதமின்றி வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது இஸ்கான். மதுரை மணிநகரம் இஸ்கான் கோயிலில் இவ்விழா செப்டம்பர் 5, சனிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரையிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறுகிறது.

காலை: 10.45 - சுபதரிசன அலங்காரம்
இரவு: 7.00 - ஜெயந்தி உற்சவ சிறப்பு அலங்காரம்
விழா நிகழ்ச்சிகள்:

ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள், ஜெயந்தி உற்சவ சிறப்பு அலங்காரம் உட்பட பல விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும். மலர் அலங்கார தரிசனத்திற்காக மதியம் 1 மணி முதல் 5 மணி வரை நடை சாத்தப்படுகிறது. விழாவினையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான ஜப மாலைகள் குறைந்த நன்கொடையில் இலவச வழிகாட்டும் புத்தகத்துடன் வழங்கப்பட உள்ளது.

தவிர சுவாமி ஸ்ரீல பிரபுபாதா உரை எழுதிய உலகப் புகழ்பெற்ற பகவத்கீதை உண்மையுருவில் என்ற புத்தகம் , ஸ்ரீமத் பாகவதம் உட்பட ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய பல முக்கியமான புத்தகங்கள், கிருஷ்ண அமுதம் ஆன்மீக மாத இதழ் மற்றும் யோகா சம்பந்தமான புத்தகங்களும் குறைந்த நன்கொடைக்கு விநியோகிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !