விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில்மகா தீபாரதனை நிகழ்ச்சி!
ADDED :3730 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் குருராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மகா தீபாரதனை நடந்தது.
விழுப்புரம் ரங்கநாதர் ரோடு வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ வித்யா விநாயகர், ஸ்ரீ வித்யா சரஸ்வதி, ஸ்ரீ குருராகவேந்திரர் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் நடந்தது.விழாவையொட்டி, சந்திரசேகர் சிவாச்சாரியார் தலைமையில், கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், தலைமை ஆசிரியர் கந்தசாமி கலந்து கொண்டனர்.