உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு கிருஷ்ண ஜெயந்தி விழா

பெங்களூரு கிருஷ்ண ஜெயந்தி விழா

பெங்களூரு: கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில், பெங்களூரு விதான் சவுதாவில் இன்று, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, என, கர்நாடக மாநில யாதவர் சங்க துணைத்தலைவர் சித்தப்பா தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கன்னடம் மற்றும் கலாசாரத்துறை சார்பில், விதான் சவுதாவின் பாங்குட் ஹாலில், இன்று மாலை, 5:30 மணிக்கு, கிருஷ்ண ஜெயந்தி விழாகொண்டாடப்படுகிறது.

முதல்வர் சித்தராமையா துவங்கி வைக்கிறார். சபாநாயகர் திம்மப்பா, மேலவை தலைவர் சங்கரமூர்த்தி, அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, உமாஸ்ரீ, எம்.பி., மோகன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பகல், 2:30 மணிக்கு, நகரத்பேட்டையிலுள்ள வேணுகோபால சுவாமி கோவிலிலிருந்து, பெங்களூரு விதான் சவுதா பாங்குட் ஹால் வரை, வெள்ளி ரதத்தில் கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெறும். இவ்வாறு சித்தப்பா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !