வேணு கோபாலசாமி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3730 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வேணுகோபால சாமி கோவில் கும்பாபிஷேக விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டி கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபாலசாமி கோவில் விமானம், ராஜகோபுரம், முகப்பு சுதை,பிம்பம் ஆகியவை, யாதவ மகா சபையினரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம், வரும் 9ம் தேதி நடக்கிறது.முன்னதாக வரும் 8ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. மறுநாள் (9ம் தேதி) காலை 9.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை யாதவ மகா சபையினர் செய்து வருகின்றனர்.