உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி மகோற்சவம்!

உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி மகோற்சவம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வேணுகோபாலன் ஜெயந்தி அவதார மகோற்சவ விழா, இன்று துவங்குகிறது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், ஸ்ரீருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணு கோபாலன் ஜெயந்தி அவதார மகோத்சவ விழா, இன்று துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.முன்னதாக  மாலை 6:00 மணிக்கு பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உபயத்தில் அனுக்ஞை நடந்தது. 5.9.15 காலை ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலன் அலங்கரிக்கப்பட்ட முத்துபந்தலில் வீதியுலாவும், மதியம் கோவில் வளாகத்தில் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனமும் நடக்கிறது.இரவு கிருஷ்ணஜெயந்தி விழாவின் ஒருபகுதியாக அம்சவாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 9ம் தேதி இரவு கருடசேவையும், 12ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. தினசரி வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !