உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா!

கள்ளக்குறிச்சி கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி 10ம் ஆண்டு விழா இன்று துவங்குகிறது.கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி 10ம் ஆண்டு விழா இன்று துவங்குகிறது.

நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனையும், நாளை(6ம் தேதி) காலை 8 மணியளவில் பெருமாள் கோவில் வளாகத்தில் உறியடி உற்சவமும் நடக்கிறது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச ராமானுஜாசார்யார் சுவாமிகள் தலைமை தாங்கி, விழாவை நடத்தி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !