சின்னசேலத்தில் சங்கடஹர சதுர்த்தி!
ADDED :3730 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அரண்மனை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சின்னசேலத்தில் உள்ள அரண்மனை விநாயகருக்கு, 108 வது ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
இதை முன்னிட்டு கோவிலில் கணபதி, கலசம், சங்கு, பால் குடம் என அனைத்திலும் 108 வைத்து பெருவிழா நடந்தது. சிவனடியார்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று, சதுர்த்தி ஹோமம், தீபாரதனை செய்தனர். தேரோடும் வீதிகள் வழியாக வந்து சுவாமிக்கு அபிஷேம் ஆராதனை செய்தனர். முன்னதாக மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். ஏற்பாடுகளை சதுர்த்தி குழுவினர், சுபாஷ் சந்திரபோஸ், வேலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.