உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண மகோற்சவம்: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!

திருக்கல்யாண மகோற்சவம்: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில், நேற்று நடைபெற்ற வள்ளி – முருகன் திருக்கல்யாண மகோற்சவத்தில், திருமண வரம் வேண்டி ஏராளமான ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து வழிபட்டனர். சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில் ஆறாம் ஆண்டு, வள்ளி – முருகன் திருக்கல்யாண மகோற்சவம் நேற்று நடந்தது. இதில், திருமண வரம் வேண்டி, 900 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். காலை, 9:00 மணியவில் வள்ளி – மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, திருக்கல்யாணம் நடந்தது. திருக்கயிலாய இசை முழங்க, வள்ளி மணவாள பெருமான் உள்புறப்பாடு நடந்தது. கோவிலின் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள் திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !