உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணன் அவதார விழா கோலாட்டத்துடன் ஊர்வலம்

கண்ணன் அவதார விழா கோலாட்டத்துடன் ஊர்வலம்

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், பாண்டவப் பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில், ஸ்ரீயதுகுல வேணுகோபாலன் பஜனை மந்திரத்தில், கண்ணன் அவதார விழா நேற்று துவங்கியது. பெரிய காஞ்சிபுரம், பாண்டவப் பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில், ஸ்ரீயதுகுல வேணுகோபாலன் பஜனை மந்திரம் உள்ளது; இங்கு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 14 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில், கண்ணன் மலர் அலங்காரத்தில் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, அங்கு வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும், கோலாட்டமும் நடைபெற்றது. கண்ணன் அவதார விழாவை முன்னிட்டு, நேற்று காலை திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 8:00 மணியளவில், கண்ணன் மலர் அலங்காரத்தில், பாண்டவ பெருமாள் கோவில் தெரு, ஏகாம்பரம் சன்னதி தெரு, சாலை தெரு போன்ற பகுதிகளில் சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்ணன் அலங்கார வண்டி ஊர்வலம் முன், கோலாட்டம் ஆடி சென்றனர். இத்திருவிழா, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !