செல்வகணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தி யாகம்
ADDED :3722 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி, செல்வகணபதி சுவாமி கோவிலில், சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது. திருக்கோவிலூர், மணம்பூண்டி செல்வகணபதி சுவாமி கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சாமிநாத குருக்கள் தலைமையில் செல்வகணபதிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீ துர்க்கா ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமங்கள் நடந்தது. கடம் புறப்பாடாகி, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.