விநாயகர் சிலை பணிகள் தீவிரம்
ADDED :3721 days ago
சங்கராபுரம்: விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சங்கராபுரம் முதல்பாலமேட்டில், ராயர் ரைஸ்மில் வளாகத்தில், ஆத்தூரை சேர்ந்த கருப்பண்ணன் தலைமையில், 6 பேர் சங்கராபுரத்தில் கடந்த ஒரு மாத மாக தங்கி விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை தயாரிக்கப்படும் சிலைகள், ஆயிரம் ருபாயிலிருந்து 11 ஆயிரம் ருபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.