உள்ளூர் செய்திகள்

ஷத்திரியன்!

முற்காலத்தில் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களை ஷத்திரியர்கள் என அழைத்தனர். இந்த பெயர் வந்த காரணம் தெரியுமா? கிருதயுகத்தில் மக்களும், மன்னர்களும் தர்மம் தவறாமல் நடந்து வந்தனர். எனவே, அந்த யுகத்தில் காவல்துறை, நீதித்துறையெல்லாம் கிடையாது. பின்னர் வந்த கலியுகத்தின் துவக்கத்தில்தான் மக்கள் ஆசைக்கு அடிமையாகி, தங்களுக்குள் மோதிக் கொண்டனர். வேதம் படிப்பதையும், தர்மப்படி நடப்பதையும் கைவிட்டனர். எனவே தர்மத்தை கடைபிடிக்கும் நியதிகள் அடங்கிய, தண்டநுõல் இயற்றப்பட்டது. ஒரு லட்சம் ஸ்லோகம் கொண்ட இந்த நுõலை பிரம்மா இயற்றினார். இந்நுõலை சிவன் பத்தாயிரம் ஸ்லோகங்களாக சுருக்கி, வைசாலாட்சகம் என பெயர் வைத்தார். இந்திரனோ அதை மேலும் சுருக்கி ஐந்தாயிரம் ஸ்லோகமாக்கினான். குரு பகவான் அதை மூவாயிரம் கொண்டதாக சுருக்கினார். சுக்ராச்சாரியார் அதை ஆயிரமாக குறைத்து எழுதினார். இந்த நுõலில் கூறப்பட்டபடி, பூமியில் ஆட்சி நடத்த ஒரு தலைவனை நியமிக்கும்படி பெருமாளிடம் தேவர்கள் வேண்டினர். அவர் தன் மானசீக புத்திரனான விரஜன் என்பவனைத் தலைவனாக்கினார். அவனது பரம்பரையில் வந்த ஒருவன் பிருது எனப்பட்டான். அவனது பெயராலேயே பூமிக்கு, பிருத்வி என்று பெயர் ஏற்பட்டது. அவனை ஷத்திரிய ராஜா என்று அழைத்தனர். ஷத்திரியன் என்றால் நல்லாட்சி நடத்துபவன் என்று பொருள். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் வந்த எல்லா மன்னர்களையும் ஷத்திரியன் என்று அழைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !