சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் விமானங்களுக்கு பாலாலயம்!
ADDED :3713 days ago
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் துவங்க இருப்பதை முன்னிட்டு, நேற்று ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. அதனால், அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து, நான்கு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் துவங்க உள்ளன.அதை முன்னிட்டு, இரண்டு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் 13 பரிவார தெய்வங்களின் விமானங்கள், இரண்டு பக்த விமானங்கள் என, மொத்தம் 15 விமானங்களுக்கு, நேற்று காலை, 10:00 மணியளவில் பாலாலயம் நடைபெற்றது. விமானங்களின் படங்கள், அத்திப்பலகையில் வரையப்பட்டிருந்தன. காலை 7:00 மணி முதல் யாகம், சிறப்பு வழிபாடுகள், பாலாலயம் நடந்தன.