தட்சிணாமூர்த்தி ஹோமம் இன்று காலை நடக்கிறது
ADDED :3718 days ago
கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட் சார்பில், 12வது ஆண்டு விழா மற்றும் மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம் இன்று (செப்., 10) நடக்கிறது. கரூர் பசுபதீஸ்வரா கோவில் அருகில் உள்ள ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில், இன்று காலை, 8 மணிக்கு விநாயகர் பூஜையுடன், முரளி சிவாச்சாரியார் முன்னிலையில் ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்கள், பேனா ஆகியவை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மாலை, 6 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட் தலைவர் குணசேகரன், செயலாளர் மோகன், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.