சூரியபிரபை வாகனத்தில் வேணுகோபாலன் வீதியுலா!
ADDED :3826 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழாவில், சூரியபிரபை வாகனத்தில் வேணுகோபாலன் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கவுள்ளது. விழாவின் 6ம் நாளான நேற்று காலை வேணுகோபாலன், சிறப்பு அலங்காரத்துடன், சூரியபிரபை வாகனத்தில்வீதியுலா நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.