உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பொற்சோதிநாதர் கோவிலில் கயிலை வாத்திய இசைப்பயிற்சி!

செம்பொற்சோதிநாதர் கோவிலில் கயிலை வாத்திய இசைப்பயிற்சி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கயிலை வாத்திய இசைப்பயிற்சி துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உள்ள செம்பொற்சோதிநாதர் கோவிலில் இசைக்கருவிகள் இசைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. சிவபெருமானுக்கு உகந்த கயிலை வாத்தியம், பிரம்ம தாளம், எக்காளம், சங்கு உள்ளிட்ட கருவிகள் இசைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் ஞாயிறுதோறும் பகல் 11:00 மணிக்கு, பயிற்சி வகுப்பு நடக்கிறது. இப்பயிற்சி வகுப் புகளை புதுச்சேரி அடுத்த வில்லியனூரை சேர்ந்த பயிற்சியாளர் அசோக் நடத்தி வருகிறார். இசைக் கருவிகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகி நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !