புதுச்சேரியில் 24 அடி உயர மகா கணபதி!
விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிறிய அளவிலான விநாயகர் சிலை முதல், ‘மெகா’ சைஸ் விநாய கர் வரை, செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 5 அடி உயரத்தில் ஆரம்பித்து, 17 அடி உயரம் வரையிலான சிலைகள், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வகையில், மரவள்ளி கிழங்கு மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்காத வகையில், வாட்டர் கலர் கொண்டு, வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
பணிகள் தீவிரம்: அதேபோன்று, திருக்கனுார் அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில், 3 அடி முதல் 16 அடி வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வ ருகின்றன. புதுச்சேரி பகுதிகளில் தயாராகும் விநாயகர் சிலைகள், புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சதுர்த்தி பேரவை: புதுச்சேரியில், முன்னாள் எம்.எல்.ஏ., துரை முனுசாமி என்பவரால், விநாயகர் சதுர்த்தி விழா பேரவை துவக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களோடு, இந்து முன்னணியினரும் இணைந்து செயல்பட்டு வரு கின்றனர்.
இந்து முன்னணி: விழா ஏற்பாடுகள் குறித்து, மாநில இந்து முன்னணி தலைவர் சுனில்குமார் கூறும்போது, ‘இந்துக்களிடம் ஒற்றுமையை உண்டாக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்து முன்னணி சார்பில், புதுச்சேரியில் 125 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சாரத்தில், 25 அடி உயர, விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. விழா துவங்கும் 17ம் தேதி ஆரம்பித்து, 21ம் தேதி வரை, ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, புதுச்சேரி துறைமுகம் அருகே கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. செஞ்சி, விழுப்புரம், வளவனுார், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், விநாயகர் சிலைகள், புதுச்சேரி இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்கின்றன’ என்றார்.