உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எ.சாத்தனூரில் ஐந்து கோவில்களில் கும்பாபிஷேக விழா!

எ.சாத்தனூரில் ஐந்து கோவில்களில் கும்பாபிஷேக விழா!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த எ.சாத்தனூர் கிராமத்தில் ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா எ.சாத்தனூர் கிராமத்திலுள்ள ஸ்ரீவிநாயகர், முத்துமாரியம்மன், ஸ்ரீஐயனார், பிடாரிஅம்மன், ஸ்ரீசுப்ரமணிய கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 5 மணிக்கு யாக சாலை பூஜை ஆரம்பம், பூர்ணா ஹýதி தீபாராதனை, 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை குமரகுரு எம்.எல்.ஏ., மற்றும் ஸ்ரீசாரதா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்மவிகாச ப்ரியா அம்பா முன்னிலை வகித்தனர். காலை 7:50 மணிக்கு பிடாரி அம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீஐயனார், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோவில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மூத்த வழக்கறிஞர் பொன்ராவணன், ஸ்ரீவிநாயகா கலை கல்லூரி சேர்மன் நமச்சிவாயம் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !