உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா!

வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா!

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில், உறியடி விழா நடைபெற்றது. கவரைப்பேட்டை ரயில் நிலைய  சாலையில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 10ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி உற்சவ நிகழ்வுகள், தொடர்ந்து, 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள யாதவ  குடும்பத்தினர் சார்பில், உறியடி விழா வெகு விமர்சையாக நடந்தது. அப்போது, உறியடி கண்ணனாக, சிறப்பு அலங்காரத்தில், உற்சவ மூர்த்தி, அ ருள் பாலித்தார். அதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், முதிய வர்கள் என, ஏராள மானோர் உறியடித்தனர். உறியடி நிகழ்வை காண ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !