வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.41 லட்சம்!
ADDED :3938 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 41.63 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி. வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து. மூலவரை தரிசித்து செல்கின்றனர். இவர்கள். தங்களது வேண்டுதல் நிறைவேற, ரொக்கம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 30 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, கோவில் அதிகாரி ராமிரெட்டி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்கள் எண்ணினர். இதில், 41,63,054 ரூபாய் ரொக்கம், 53 கிராம் தங்கம், 169 கிலோ வெள்ளி, 82 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.