மாமல்லபுரம் பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்!
மாமல்லபுரம்: அருங்குன்றம், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம், நேற்று முன்தினம் நடந்தது. மானாமதி அடுத்த, அரு ங்குன்றம் கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், லட்சுமி நாராயண பெரு மாள், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், தும்பிக்கையாழ்வார், நாகராஜர், கருடர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இக்கே ாவிலில், மூலவர் சன்னிதி விமானத்தை புதுப்பித்தல்; ஆஞ்சநேயருக்கு, தனி சன்னிதி அமைத்து பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ÷ மற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி அங்குரார்ப் பணம், முதல்கால பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் நான்காம் கால பூஜைக்குபின், கலசங்கள் சன்னிதிகளை வலம் வந்து, காலை 7:05 மணிக்கு, மூலவர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகிய சன்னிதிகளின் விமானங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டு, சம்ப்ரோக்ஷணம் நடந்தது.