உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்குரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள்: 77ம் ஆண்டு மகா பரணி குருபூஜை

சத்குரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள்: 77ம் ஆண்டு மகா பரணி குருபூஜை

கரூர்: சத்குரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள், 77ம் ஆண்டு மகாபரணி குருபூஜை விழா, கரூரில் நடக்கிறது. கரூர் மாவட்டம், ஏமூர் கிராமம், கற்பகா நகரில் உள்ள சத்குரு சம்ஹாரமூர்த்தி மகாபரணி விழா, வரும், அக்டோபர், 1ம் தேதி துவங்குகிறது. அன்று, சதுர்த்தி திதியும், மஹாபரணி நட்சத்திரமும் கூடிய நாளில், காலை, 8 மணி முதல், 11 மணிக்குள் மகாபரணி விழா நடக்கிறது. தொடர்ந்து, அனுக்ஷை, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கலசஸ்தாபனம், வேதபாராயணம், மூல மந்திர மாலாமந்திர ஹோமங்கள், மஹா பூர்ணாகுதி, கலசாபிஷேகம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. கரூர் வேதபிரம்மா ஆகம விசாரத் முரளி சிவாச்சாரியார் தலைமையில் ஹோமங்கள் நடக்கிறது. கருவூர் சத்குரு சம்ஹாரமூர்த்தி டிரஸ்ட், ஏமூர் கற்பகா நகர் தலைவர் சரவணன், துணைத்தலைவர் செல்வம், செயலாளர் எஸ்.சரவணன், பொருளாளர் பன்னீர் செல்வம், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !