உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவஸ்தான  நிர்வாகத்திற்குட்பட்ட சோமேஸ்வரர் சமேத சவுந்தரநாயகி, சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி , சுந்தரேஸ்வரர் சமேத மீனாட்சி அம்மன் ÷ காவில்களுக்கு கடந்த 9ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 10ம் தேதி, மாலை 7மணிக்கு மூன்று சாமி அம்பாளுக்கும் திருக்கல் யாண நிகழ்ச்சி நடைபெற்றது. காளீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேகங்கள் நடை  பெற்றது.  தொடர்ந்து உற்சவமூர்த்தி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்  ராஜேந்திரன், ஏஎல். ஏஆர் அறக்கட்டளை நிர்வாகத் தினர், சிங்கப்பூர் ராஜேந்திரன் ,சென்னை ஜெயச்சந்திரன், காளையார்கோவில் பெரியநாயகி  டிம்பர்ஸ் உரிமையாளர் ஜெயராமன் குடும்பத்தினர், திருஞானம், ஈஸ்வரி பில்டிங் கான்ட்ராக்டர் ஆறுமுகம்,சுப்பிரமணியன் ஸ்தபதியார்  குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !