புதுச்சேரி செல்வ விநாயகர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3722 days ago
புதுச்சேரி: நயினார்மண்டபம் சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. நயினார்மண்டபம் சுதானா நகர் செல்வ விநாயகர் கோவிலில், 8 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 8 ம் தேதி துவங்கியது. தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. நேற்றிரவு 7.00 மணிக்கு, செல்வ விநாயகர், சிவ பெரு மானுக்கு அபிஷேகம் செய்யும் கோலத்திலும், உற்சவம் ஊஞ்சலில் அமர்ந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று (12ம் தேதி) ஆத்திய நந்தபிரபு அலங்காரமும், நாளை (13ம் தேதி) சித்தி, புத்தி அலங்காரத்தில் விநாயகர் பெருமான் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்துள்ளனர்.