உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிழை பொறுத்த ஐயனார் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்!

பிழை பொறுத்த ஐயனார் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்!

உளுந்தூர்பேட்டை: நொனையவாடி கிராமத்தில் பிழை பொறுத்த ஐயனார் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. உளுந்தூர்பேட்டை  தாலுகா நொனையவாடி கிராமத்தில் ஸ்ரீபிழை பொறுத்த ஐயனார் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு, ஊரணி பொங்கல் விழா நடந்தது.  அதனையொட்டி கிராம மக்கள், கோவிலில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடந்தது.  நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீஐயனார் சுவாமிக்கும் பூரணி பொற்கலை சுவாமிக்கும் திருக்கல்ய õணம் நடந்தது. பின்னர் முருகன், விநாயகர், பூரணிபொற்கலையுடன் ஐயனார், மாரியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.   இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !