புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெருவிழா!
ADDED :4043 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெரு விழா நேற்று நடந்தது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஜூபிலி பெரு விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உதகை மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 8ம் தேதி மாதா சிற ப்பு தேர் பவனி நடந்தது. பின், தினம் காலை மாலையில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடந்து வந்தது. நேற்று ஜூபிலி பெரு விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு புதுச்சேரி– கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்த ராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை தாமஸ் செய்திருந்தார்.