உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்!

விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்!

கடலுார்: கடலுார் மணவெளிப் பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  விநாயகர் சதுர்த்தி விழா வரும் 17ம்  தேதி, கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  பெரிய மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வெளி மாநிலம், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணி படிப்படிய õக நடந்து வருகிறது. தற்போது, வீடுகளில் வைத்து பூஜிக்கப்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு, வர்ணம்  பூசும் பணி கடலுார் முதுநகர், மணவெளிப் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !