சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலுக்கு ரூ.1.25 கோடியில் தங்க கோபுரம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலுக்கு ரூ 1.25 கோடி செலவில் தங்க கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. மூலவர் சேவுகப்பெருமாள் மூலஸ்தான கோபுரத்தின் மேல்பகுதி 15 அடி உயரம் 6 அடி அகலம், பிடாரி அம்மன் கோபுரம் 13 அடி உயரம் 4 அடி அகலம் கொண்டது.இதை தங்ககோபுரமாக மாற்றும் பணி நடக்கிறது. சேவுகப்பெருமாள் அய்யனார் கோபுர பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பிடாரி அம்மன் கோயில் கோபுரப்பணி நடந்து வருகிறது.இதற்காக ஆயிரம் சதுர அடி தங்கமுலாம் பூசப்பட்ட செப்புதகடு பயன்படுத்தப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.திருப்பணிக்குழு தலைவர் அருணகிரி தெரிவித்ததாவது: தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரம் அமைக்க பக்தர்கள் நன்கொடை மூலம் ரூ 1.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. கோயிலில் பல்வேறு பணிகள் நடக்கிறது. முடிவடைந்தவுடன் கும்பாபிஷேகம் நடத் த ஏற்பாடுசெய்து வருகிறோம், என்றார்.