கோதண்டராமசாமி கோயிலில் லட்சார்சனை விழா!
ADDED :3688 days ago
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், 17 வது ஆண்டு லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் ராமர், சீதை, லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கார மண்டபத்தில் இம்மூன்று உற்சவ மூர்த்திகளுக்கும் காலை 9 முதல் மாலை 7 மணி வரை ஒரு லட்சம் முறை, பெருமாளின் நாமங்களை கூறி அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர். இரவு 8 மணிக்கு அனுமன் பக்தி உலா, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை தக்கார் இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னாள் அறங்காவலர் முத்தரசன் கலந்து கொண்டார்.