உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரலாற்றுக்கு சான்றாக விளங்கும் ‘குகைகள்!

வரலாற்றுக்கு சான்றாக விளங்கும் ‘குகைகள்!

மனிதனின் முதல் வீடான ’குகைகள்’ பல வரலாற்றுக்கு சான்றாகவும், பல ரகசியங்களை தனக்குள் புதைத்துக்கொண்டு இன்றும் உள்ளன. கடந்த,  1956 ஆம் ஆண்டு வெளியான, அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக குகை இருந்தது. இந்த குகைக்குள்  செல்ல கதாநாயகன் பயன்படுத்திய அன்டா... கா... கசம்... அபுஹீ... ஹீ..கும்... திறந்திடு சீசே...என்ற வசனம் மிகவும் பிரபலமானது. குகை தான்  இந்த படத்தின் அடிப்படை ’கான்செப்டாக’ இருந்தது. இதன் காரணம், மக்களை மலைக்க வைத்து, இதை பற்றி தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப் புகளை குகைகள் ஏற்படுத்தின. மலைக்குகைகளில் (சூழ்நிலை காரணமாக) பல மன்னர்கள் மறைந்து வாழ்ந்தார்கள்.

கடந்த, 17ம் நுாற்றாண்டில் சுதந்திரப்போரில் ஈடுபட்ட மன்னர் பூலித்தேவன், போரில் தனது கோட்டையை இழந்த பின், தனது இறுதி நாட்களில்  குகைகளில் மறைந்து வாழ்ந்தார். இதுபோன்ற பல வரலாறுகளுக்கு சான்றாகவும், முனிவர்கள் தங்கி தவம் புரிந்த இடமாகவும், பல பொக்கிஷ ங்கள் மறைத்து பாதுகாக்கப்பட்ட இடமாகவும் குகைகள் இருந்தன. இந்த குகைகளுக்கும், மனிதர்களுக்குமான உறவு பலஆயிரம் ஆண்டுகளை  கடந்தது. ஆதிமனிதர்கள் நிழல், வெயில், இரவு, பகல் பாராமல் விலங்குகள் போல சுற்றித்திரிந்தனர். இவர்கள் மரத்தின் அடியில், கிளைகளில் த ங்கினார்கள். தொடர்ந்து சென்று வேட்டையில் ஈடுபட்டனர்.  இடி, மின்னல், கடும்மழை போன்ற இயற்கை இடர்களிலிருந்து தப்பிக்க, பாதுகாப் பான இடங்களை தேடியபோது, இவர்களுக்கு ஆதரவு வழங்கி அறிமுகமானவை ’குகைகள்’ தான். பூமியின் தட்பவெப்ப மாறுதல்களால், மலைகள்  உடைந்து பாறைகளுக்குள் பிளவு ஏற்பட்டு உருவாகும் மலை பொந்துகள் ’குகைகள்’ எனப்பட்டன.

இதில், மனிதர்கள் தங்கிவாழ தொடங்கினர். ஆண்டுகள் கடந்த நிலையில், மனித இனம் பெருகத்தொடங்கியதால், குகைகளில் இடநெருக்கடி  ஏற்பட்டது. இதனால்,  உடைந்த பாறைகளை, பெரிய கற்களை பயன்படுத்தி, செயற்கை குகைகள் உருவாக்கி குடிபுகுந்தனர். இது மனிதன் கட்டிய  முதல் வீடாக அமைந்தது. ஆனால், இது வாஸ்து பார்த்து உருவாக்கவில்லை. பின்பு இந்த மனித குழுக்கள், இனங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள்,  சண்டைகளில் ஈடுபட்டவர்கள் தப்பித்து செல்ல இயற்கை குகைகளுக்கு பின்வாயில்களை உருவாக்கினர். சில மீட்டர்கள் தொலைவு வரை மட்டுமே  பாறைகளை குடைந்து இதுபோல் அமைத்தவர்கள், பிற்காலத்தில் கூரான ஆயுதங்களை பயன்படுத்தி பல மீட்டர் தொலைவுக்கு குகைகளுக்குள்  சுரங்கப்பாதை அமைத்தனர்.  

அதை பயன்படுத்தி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் அளவுக்கு ரகசிய வழிகளை உருவாக்கினர். இதை அடிப்படையாக  பயன்படுத்தி தான், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நிலவரை, பாதாள வழிகள், சுரங்கபாதைகள் உருவாக்கப்பட்டன.  மன்னர்கள் ஆட்சியில்,  எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், மறைந்து செல்லவும், ஒற்றர்கள், போர்வீரர்கள் மறைமுகமாக சென்று திரும்பவும், பயிற்சி பெறவும், த ங்களிடமிருந்த பொக்கிஷங்களை ரகசியமாக பாதுகாக்கவும் இந்த குகைகளை பயன்படுத்தினர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டப்பட்ட  முக்கிய கோவில்களில் ’குகைகள்’ அமைக்கப்பட்டு, ரகசியமான அரசாங்க காரியங்களுக்கும், ராஜகுடும்பத்தினர் கோவிலுக்கு சென்று திரு ம்பவும், எதிரிகள் சூழ்ந்த நெருக்கடியான நேரத்தில் தப்பிச்செல்லவும் பயன்படுத்தப்பட்டன. மடத்துக்குளம் அருகேயுள்ள கடத்துார் மருதுடையார்  கோவிலில் இது போன்ற குகை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !