உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகாதேவி கோவிலில் பிரத்தியங்கிரா யாகம்!

ரேணுகாதேவி கோவிலில் பிரத்தியங்கிரா யாகம்!

உடுமலை: உடுமலை, பெதப்பம்பட்டி - செஞ்சேரிமலை ரோட்டில், அமைந்துள்ளது, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, பகவதி அம்மன் மற்றும் ரேணுகாதேவி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு அமாவாசையன்றும், பிரத்தியங்கிரா மகா யாகம் நடத்தப்படுகிறது. அமாவாசையன்று, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும், அனைத்து வித பாவதோஷங்கள் நீங்கவும், பிரத்தியங்கிரா தேவிக்கு வர மிளகாய்களில் மகா யாகம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !