உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்!

விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்!

ஈரோடு: ஈரோடு, முத்தம்பாளையம் பகுதி1ல், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. விநாயகர் சதுர்த்தி, 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. முத்தம்பாளையம் பகுதி1ல், 13ம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் தினமும் நடக்கிறது. 17ம் தேதி காலை, 7 மணிக்கு விநாயகர் சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம், 12 மணிக்கு உச்சி பூஜை, அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை, 8 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி சிறுவர், சிறுமி ஓட்ட பந்தயம், பாட்டில் தண்ணீர் நிரப்பும் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓவிய போட்டி, உரியடித்தல், லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர், சாக்கு போட்டிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !