திருமலையில் நாளை பிரம்மோற்சவ விழா கோலாகல துவக்கம்!
திருப்பதி: திருமலையில் நடைபெறும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் ஒன்றான பிரம்மோற்சவ விழா நாளை (16ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நடைபெறும் 9 நாட்களிலும் 482 பஸ்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு என 2200ட்ரிப்புகள் சென்றுவரும், கருடசேவை நடைபெறும் நாளன்று 512 பஸ்கள் 3500 ட்ரிப்புகள் சென்றுவரும், ஒவ்வொரு 20 நொடிக்கும் ஒரு பஸ் பக்தர்களை சுமந்து செல்லும்.விழாவினை முன்னிட்டு 60 புதிய பஸ்களும் இயக்கப்படுகின்றன.இது தவிர இலவச பஸ்களும் பக்தர்களை விரும்பும் இடங்களுக்கு கொண்டு செல்லும். திருமலை வரும் பக்தர்களுக்கு குடிநீர் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
16.9.15–காலையில் கொடியேற்றம் இரவில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியர்களுடன் மாடவீதிகளில் உலா
17.9.15–காலையில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா இரவில் ஹம்ச வாகனத்தில் உலா
18.9.15–காலை சிம்ம வாகனத்தில் உலா இரவு முத்துபந்தல் வாகன உலா
19.9.15–காலை கற்பகவிருட்ச வாகன உலா இரவு சர்வபூபாள வாகன உலா
20.9.15–காலை மோகினி அவதாரத்தில் உலா இரவு கருட வாகன உலா
21.9.15–காலை ஹனுமந்த வாகன உலா மாலை தங்கரதம் இரவு கஜவாகன உலா
22.9.15–காலை சூர்யபிரபை வாகன உலா இரவு சந்திர பிரபை வாகன உலா
23.9.15–காலை தேரோட்டம் இரவு குதிரை வாகனத்தில் உலா
24.9.15–சக்ரஸ்நானம் மாலை கொடியிறக்கம்.