உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேடகம் கோயிலில் திருப்பணி பாலாலயம் !

திருவேடகம் கோயிலில் திருப்பணி பாலாலயம் !

திருவேடகம்: திருவேடகம் சவுந்தரராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணியை தொடங்க நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.  இக்கோயில் 200 ஆண்டிற்கு முன்பு பழமையானதாகும். இந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடக்க திருப்பணி துவங்கியது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் சிதம்பரம், கோபால்சாமி யாகபூஜை செய்தனர். பின்னர் சவுந்தரராஜபெருமாள் சுவாமி, கருப்புவிநாயகர் சுவாமி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் கோபுரங்களில் புனிதநீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர். தில்லைசிதம்பரம்,ரத்தினசபாபதி, சரோஜா,சவுந்திரராஜன், சேகர்,சுதர்சன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !