உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏடகநாதர்சுவாமி கோயிலில் அன்னதானம் மண்டபம் திறப்பு!

ஏடகநாதர்சுவாமி கோயிலில் அன்னதானம் மண்டபம் திறப்பு!

திருவேடகம்: திருவேடகம் ஏலவார்குழலியம்மன் ஏடகநாதர்சுவாமி கோயிலில் 15 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டப கட்டடம் திறப்பு விழாநடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அன்னதானமண்டபம் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இங்கு சிவாச்சாரியார்கள் பிரதீப், கணேசன் பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராடசி தலைவர் மணிபெரியசாமி, துணைதலைவர் முருகன், ஒன்றியகவுன்சிலர் செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர் ராமுஅம்பலம், குமரவேல், வி.ஏ.ஓ.,ஜெயபிரகாஷ் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறநிலையதுறை ஆய்வாளர் ராதிகா, நிர்வாக அதிகாரி சுமதி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !