அற்புத அன்னைசர்ச் தேர் பவனி
ADDED :3675 days ago
உடுமலை :உடுமலை அற்புத அன்னை ஆலயத் தேர் பவனி, தளி ரோட்டில் நடந்தது. உடுமலை, தளி ரோட்டில் அமைந்துள்ளது அருள்நிறை அற்புத அன்னை ஆலயம். ஆலயத்தின் தேர்த்திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை, திருப்பலி, மறையுரையும், சர்ச் வளாகத்தில் தேர் பவனி நடந்தது.விழா நிறைவு நாளான, கடந்த 13ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மைகுரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், கூட்டுப்பாடற்பலியும், மாலை, 5:30 மணிக்கு, சிறப்பு திருப்பலியும் நடந்தது. அன்று, இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், அற்புத அன்னை நகரில் பவனி வந்தார். கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.