உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டு கண்காட்சியில் 2,000 விநாயகர் சிலைகள்!

வீட்டு கண்காட்சியில் 2,000 விநாயகர் சிலைகள்!

அம்பத்தூர்: சென்னை அம்பத்துார் அடுத்த நொளம்பூர், சக்தி நகர், ஸ்ரீராம் பிரதான சாலையில், கோகுலம் குடியிருப்பு அருகே வசிப்பவர் நந்தினி, 42. அவரது கணவர் வெங்கடேஷ். அவர்களுக்கு விக்னேஷ்,14; அஸ்ரிதா, 9. என மகன், மகள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், சென்னையில் புதிதாக சொந்த வீடு கட்டி அவர்கள் குடிவந்தனர். அப்போது, வீட்டின் கிரகப்பிரவேசத்தின் போது உறவினர், நண்பர்கள் அளித்த பரிசுகளில், 50 விநாயகர் சிலைகள் இருந்தன. அவற்றை ஒன்று சேர்த்து பார்த்த போது, மேலும் விநாயகர் சிலைகளை சேர்க்கும் ஆர்வம் நந்தினிக்கு ஏற்பட்டது. அதனால் உலகின் எந்த பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அவர் வாங்கும் முக்கிய பொருள் விநாயகர் சிலைதான். ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் இருந்து விநாயகர் சிலைகள் வாங்கி விடுவார். அந்த வகையில் அவரிடம் 2,500க்கும் அதிகமான பல்வேறு வடிவ விநாயகர் சிலைகள் உள்ளன. ஒரு அங்குல உயரம் முதல் ஐந்தடி உயரம் வரையிலான சிலைகள் அதில் இடம்பெற்றுள்ளன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அவரது வீட்டில், நேற்று முதல் மூன்று நாட்களுக்கு விநாயகர் சிலை கண்காட்சி நடக்கிறது. தினமும் மாலை 6:00 முதல் 9:00 மணி வரை அவற்றை, அனைவரும் பார்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !