உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் நடை அதிகாலை 1.30 மணிக்கு திறப்பு

திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் நடை அதிகாலை 1.30 மணிக்கு திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : புரட்டாசி உற்சவத்திருவிழா முதல் சனிக்கிழமையொட்டி நாளை திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் நடை அதிகாலை 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் நாளை(செப்.,19) துவங்குகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி,மதுரை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். முதல் சனிக்கிழமை துவங்குவதால் அதிகாலை 1.30 மணிக்கு நடை திறக்கபடும். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் அலுவலர்கள் செய்துள்ளனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நடைபாதைகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன. மலையடிவாரத்திலிருந்து வழக்கமான பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு மலையிலிருந்து வேணுகோபால்சாமி கோயில் வழியாக பக்தர்கள் செல்ல ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !